Aran Sei

அண்ணாமலையைப் புகழ்ந்த ‘நமது அம்மா’ இதழ்: ”‘நமது மோடி’ என்று பெயர் மாற்றினாலும் ஆச்சரியமில்லை” – ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்

மது மோடி, நமது அமித்ஷா என்று நமது அம்மா இதழின் பெயரை அதிமுக மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நமது அம்மா இதழ் பாஜக தலைவர் அண்ணாமலையை பாராட்டியுள்ளது. அதில்,  “பாஜகவின் தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே வெகுவாகப் பாராட்ட பட வேண்டியவர். அவர் ஊழலுக்கு எதிராக கண்ணி வெடி வைத்து தாக்குகிறார். திமுகவின் ஊழல் அமைச்சர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்” என்று  இதழ் தெரிவித்திருந்தது.

இது குறித்து அரண்செய்-யிடம் பேசிய ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் “எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக தற்போது பாஜகவின் ஒரு அங்கமாக மாறிவிட்டதைத்தான் இது காட்டுகிறது. திமுக மீது விமர்சனம் இருந்தால் அதை அதிமுகவே நேரடியாக பேசியிருக்கலாம். ஆனால், நிகழ்வதென்னவோ பாஜகவின் குரலாக அதிமுக மாறி இருக்கிறது.  நமது அம்மா என்கிற இதழை நமது மோடி, நமது அமித்ஷா என்று பெயர் மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. அதிமுகவை விட 27 விழுக்காடு குறைந்த ஓட்டு வாங்கியுள்ளது பாஜக. அதைக் கண்டு பயப்படுவது அதிமுகவின் எதிர்காலத்திற்கு கேடு” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்துப் அரண்செய்-யிடம் பேசிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ”நாட்டில் எவ்வளவோ பிரச்சினை உள்ளது. நமது அம்மா இதழுக்கு எதிர்வினையாற்றுவதென்பது நேரவிரயம்” என்று கூறினார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்