இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது – பாஜக தலைவரை கிண்டல் செய்த ப.சிதம்பரம்
7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடைபெற்றது.
31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் பிணை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே 18-ம் தேதி சிறப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்தது.
இத்தீர்ப்பின், அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை சுட்டிக்காட்டினர். மேலும், இடைக்காலமாக பேரறிவாளனை போல தங்களுக்கும் பிணை வழங்க கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை (26.09.2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
பத்ரி, நாராயணன், சங்கராச்சாரியார் | வில்லியம் ஜோன்ஸ் பேரன்களா ? | Annamalai BJP |Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.