Aran Sei

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5000 வழங்கிய நளினி: சிறையில் வேலை செய்து சேமித்த பணத்தில் இருந்து நிதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5000 அளித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் பெண்கள் சிறையில் நளினி 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பான கோரிக்கைகள் நீண்டகாலமாக அரசின் பரிசீலனையில் இருந்து வருகின்றன.

தற்போது, தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பைத் தடுக்க பல்வேறு தரப்பினரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

‘ஏழு தமிழர்களையும் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்க வேண்டும்’ – முதல்வருக்கு தமிழ்த்தேசிய பேரியக்கம் வேண்டுகோள்

இந்நிலையில், நளினியும் கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.5000 தொகையைச் சிறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இத்தொகையானது சிறையில் அவர் வேலை செய்து சேமித்து வைத்துள்ள தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரே நளினி, பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்