Aran Sei

காவல்நிலையத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி – நீதி வேண்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

நாக்பூர் நகரின் பார்டி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 7 அன்று, மனோஜ் தாகூர் என்ற மாற்றுத்திறனாளி பார்டி பகுதியின் நகபண்டி பகுதியில் காவல்துறையால் தாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் ஆசாத் சமாஜ் கட்சி ’ – ’பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் அறிவிப்பு

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறை துணை ஆணையர் நீலத்பால், மாற்றுத் திறனாளி நபர் தலைக்கவசம் அல்லது முகக்கவசம் அணியாது வாகனத்தில் சென்ற நிலையில், காவல்துறை சோதனையில் ஈடுபட்டதைக் கண்டதும் வேகமாக சென்றதாகவும், அப்போது காவல்துறை துணை ஆய்வாளர் வண்டியைப் பிடித்த நிலையில், மாற்றுத்திறனாளி மீண்டும் வாகனத்தை வேகமாக இயக்கியதால்  ஆய்வாளர் கீழே விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும்,மாற்றுத்திறனாளி  சில தொலைவு  சென்ற நிலையில் காவல்துறை அவரை துரத்திச் சென்று  கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட அவர் காவல்நிலையத்தில் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்ததாகவும் காவல்துறை துணை ஆணையர் நீலத்பால் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

‘உத்தரபிரதேசத்தில் கிராமத்தலைவரின் வீட்டை கொள்ளையடித்த காவல்துறை’ – அரசின் தலித் விரோதப் போக்கு என மாயாவதி, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அதுமட்டுமல்லாது, “காவல் நிலையத்தில் மயக்கமடைந்த நிலையில் அவர் உடலில் சில அசைவுகள் இருந்ததை சிசிடிவி காட்சி வழியே காண முடிந்தது. எனவே அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே  மரணமடைந்துள்ளார்” என்று நீலத்பால் தெரிவித்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி மனோஜ் தாகூர் இறந்ததை கேள்விப்பட்ட அப்பகுதிமக்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்