Aran Sei

ராணுவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நாகா மக்கள் – அறிக்கையை சமர்பித்த சிறப்பு விசாரணைக் குழு

டிசம்பர் 4ஆம் தேதி நாகாலாந்து மாநில மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாகாலாந்து அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் விசாரணை குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.

இக்கொலை தொடர்பாக உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்தின்படி நீதி வழங்கும் என்று நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ டிசம்பர் 5ஆம் தேதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 10), சிறப்புப் விசாரணை குழு தனது இடைக்கால அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதிகாரத்திற்கு எதிராக சமர் புரியும் நாகாலாந்து மக்கள் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி நடைபயணம்

ஆனால், இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வாய் திறக்காமல் இருந்த நிலையில், மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.  “மோன் படுகொலை சம்பவம் தொடர்பாக ஒரு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

“நான் கூடுதலாக சில தகவல்கள் சொல்ல வேண்டுமானால், ஓட்டிங்கில் நடந்த இரண்டாவது சம்பவம் இரவு 9.30 மணியளவில் நடந்தது. இராணுவத்தால் பதுங்கியிருந்து கொல்லப்பட்ட ஆறு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் உடல்களைக் கண்டுபிடித்த பிறகு, இராணுவ வீரர்கள் மீது கிராம மக்கள் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இம்மோதலில் கிராமவாசிகள் ஏழு பேரும் இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். அடுத்த நாள் மோன் நகரில் நடந்த தாக்குதலில் மேலும் ஒரு கிராமவாசி கொல்லப்பட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்