Aran Sei

நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியின் பிரிவு உபசரிப்பு விழா – புறக்கணிக்க போவதாக ஊடகவியலாளர் சங்கம் ஒருமனதாக முடிவு

நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட இருக்கும்  பிரிவு உபசரிப்பு விழா புறக்கணிக்க இருப்பதாக நாகாலாந்தில் உள்ள கோஹிமா பிரஸ் கிளப் முடிவு செய்துள்ளது.

ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து அவரை கௌரவிக்கும் விதமாக விழா ஒன்றை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நாகலாந்தின் 19 வது கவர்னராக 2019 ஆம் ஆண்டு பொற்பேற்ற ரவி, தொடர்ந்து ஊடகங்களை புறக்கணித்து வந்ததால், அவர்மேல் இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழாவைப் புறக்கணிக்க இருப்பதாக கேபிசி தெரிவித்துள்ளது.

சிபிஐ முன்னாள் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

”நாகாலாந்தின் கவர்னராக பொறுப்பேற்ற ரவி, ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது, ஊடக சங்கங்களான கேபிசி மற்றும் நாகாலாந்து பத்திரிக்கை சங்கத்தையும் புறக்கணித்தார். அவரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த ஆளுநர் மாளிகை, உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது, எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் தேசிய செய்தி நிறுவனங்களின் நிருபர்களுக்கும் நேர்காணல்களை தர மறுத்துள்ளது” என கேபிசி தலைவர் அலிஸ் யோஷோதெரிவித்துள்ளார்.

செவ்வாய் (செப்டம்பர் 15) மாலை 6 மணிக்கு, நாகாலாந்து முதலமைச்சரின் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவைப் புறக்கணிப்பதாக கேபிசியின் உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.

கேபிசியின் சார்பாக, அனைத்து ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும் யோஷோ கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.என். ரவியை தமிழ்நாட்டிற்கு மாற்றியிருப்பது நாகலாந்திற்கு நிம்மதி – நாகலாந்து தேசியவாத முற்போக்கு கட்சி கருத்து

”ஆர்.என். ரவியின் பிரியா விடை நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவோ அல்லது அது தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாமென்றோ கோஹிமா பிரஸ் கிளப் கேட்கவில்லை. அதை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன். ஆனால், நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவிற்கு நாகாலாந்தைச் சேர்ந்த ஊடக நிறுவனங்கள் ஆதரவளித்தால் வரவேற்ப்போம். நாகாலாந்தின் பத்திரிக்கை மற்றும் ஊடக சகோதரத்துவத்திற்கு எதிராக செயல்பட்ட ரவியின் அணுகுமுறை ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக் கூடாது” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருப்பதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த நாகாலாந்தின் மூத்த ஊடகவியலாளர் கல்லோல் தே, ”முன்மாதிரி இல்லாத முடிவுகள் மற்றும் குறுக்கீடுகளை லட்சியமாக கொண்டிருந்த ரவியின் வெளியேறுதல்  ஏற்படுத்தியிருக்கும் கலவையான உணர்ச்சிகளை வேறு எந்த ஆளுநரின் வெளியேறுதலும் ஏற்படுத்தவில்லை. அவருடைய திமிர் பிடித்த நடத்தையின் காரணமாக, அவரை நாகாலாந்தின் ஊடகவியலாளர்கள் நினைவில் கொண்டிருப்பார்கள்” என பதிவிட்டிருந்தார்.

பிரஸ் டிரஸ் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய நாராயண் பகதூர், “நாங்கள் மாநில அரசுக்கு எதிராக இல்லை. அரசு விழாக்களுக்கு ஊடகங்கள் அழைக்கப்படாவிட்டாலும், அங்குச் சென்று விழாவை முன்னிலைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எங்களின் கடமை. ஆனால், இந்த நிகழ்வில் நான் கேபிசியின் பக்கம் நிற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களை புறக்கணித்து வந்த ஆர்.என். ரவியின் அணுகுமுறையைக் கண்டிக்கிறேன்.

Source : EastMojo

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்