Aran Sei

‘நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து யாரிடமும் பேசக்கூடாது’- உறவினர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

டிசம்பர் 4 அன்று நாகாலாந்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஊடகங்களிடம் பேசக்கூடாது என இச்சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களின் உறவினர்களிடம் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வரும் 30 வயதான யீவாங் கொன்யாக் மற்றும் 22 வயதான ஷீவாங் கொன்யாக் ஆகியோரின் உறவினர்கள் இத்தகவலை கூறியுள்ளனர். அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

உச்சந்தலை, கண் பகுதி, மார்பு மற்றும் முழங்கை ஆகிய இடங்களில் குண்டு காயங்களுடன், டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர்களில் ஒருவர் கூடுதல் வசதிகளுடன் கூடிய வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ தாக்குதல் சம்பவம் குறித்து முன்னர் விவரங்களை அளித்து வந்த உயிர் பிழைத்தவர்களும் அவர்களது உறவினர்களும் தற்போது, ஊடகவியலாளர்கள் உட்பட யாருடனும் இச்சம்பவம் குறித்து பேசக் கூடாது என்று நாகாலாந்து அதிகாரிகள் கூறியதாக தெரிவித்து, அச்சம்பவம் குறித்து பேச மறுத்துள்ளனர்.

காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கமும் மக்கள் உயிரிழப்பும் – ஒன்றிய அரசு தகவல்

“தயவுசெய்து எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள். இதைப் பற்றி யாரிடமும் பேச கூடாது என எங்களிடம் கூறியிருக்கிறார்கள்” என்று உயிர் பிழைத்த ஒருவரின் உறவினர் ஒருவர் அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்