Aran Sei

பழங்குடிகளை சுட்டுக்கொன்ற இராணுவம்: ‘சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து சட்டப்படி நீதி வழங்கும்’- நாகாலாந்து முதலமைச்சர்

நாகாலாந்தில் பழங்குடிகளை இராணுவம் சுட்டுக்கொன்ற விவகாரத்தில், அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு விசாரணைக் குழு இப்படுகொலைக் குறித்து விசாரிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

நாகாலாந்தில் 13 பழங்குடிகள் சுட்டுக்கொலை: வருத்தம் தெரிவித்த ராணுவம் – மாநிலம் முழுவதும் பதற்றம்

இதுதொடர்பாக, இன்று(டிசம்பர் 5), நெய்பியு ரியோ தனது டிவிட்டர் பக்கத்தில், “ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்த துர்வாய்ப்பான சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு இக்கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்தின்படி நீதி வழங்கும். அனைவரிடமிருந்தும் அமைதிக்காக வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், “நாகாலாந்து மாநிலம் ஓட்டிங்கில் நடந்த துர்வாய்ப்பான சம்பவத்தால் வேதனையடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாகாலாந்து மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு இச்சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும். உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்