Aran Sei

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்க – நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேண்டுகோள்

நாகாலாந்து மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டித்த ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோவின் கட்சியான  தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மோன் மாவட்டத்தில் 14 பொதுமக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை  ரத்து செய்யக் கோரி நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நாகா சிவில் அமைப்புகளும் கிளர்ந்தெழுந்திருக்கும் நிலையில், முழு நாகாலாந்திலும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது போல் நடிக்கும் பாஜக – கேரளா முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி, “இது போன்ற மொழியில் அறிவிப்புகளையும் உத்தரவுகளையும் வெளியிடுவது தேவையற்றது. இளம் தலைமுறையினரின் லட்சியங்களையும் ஆசைகளையும் பாதிக்கும். குறிப்பாக, பல்வேறு குழுக்களை உள்ளடக்கிய நாகா அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதித் தீர்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் இச்சமயத்தில் இந்த உத்தரவு மக்களின் மனதை பாதிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

“சுற்றுலா மற்றும் சேவைத் துறையில் நாகாலாந்து நல்ல வளர்ச்சியை அடைந்து, பிரபலமான சுற்றுலா பிராந்தியமாக உருவெடுத்துள்ளது. ஆனால், தேவையில்லாமல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை நீட்டித்ததன் வழியாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நீரோட்டத்துடன் இணைவதற்கான நமது முயற்சிகளுக்கு எதிர்மறையான முடிவுகளையே கொடுக்கும்” என்று அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் குழந்தைகளைப் பாதிக்காது; பள்ளிக்கு அனுப்புங்கள் – மருத்துவர் ககன்தீப் காங்

“மேலும், கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. மாநிலம் முழுதும் அமைதி நிலவுகிறது. நாகாலாந்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் அமைதியான சூழலில்தான் உள்ளது. பல அமைப்புகளால், நாகாலாந்து மிகவும் அமைதியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்