Aran Sei

நாகாலாந்து விடுதலை குழுக்களுடன் பேச்சுவார்த்தை – உருவானது முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்றக் குழு

மைதிப் பேச்சுவார்த்தை தொடர்பானவற்றை விவாதிக்க நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ தலைமையில் நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 11), நாகாலாந்து தலைமைச் செயலாளர் ஜே ஆலம் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிவிப்பில், நாடாளுமன்றக் குழுவில் நாகாலாந்து சட்டபேரவை உறுப்பினர்கள் 60 பேரும், அம்மாநிலத்தைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

“இந்த நாடாளுமன்றக் குழு நாகாலாந்து அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களைக் குறித்து விவாதிப்பதோடு, இந்திய ஒன்றிய அரசுக்கும் நாகா அரசியல் குழுக்களுக்கும் இடையில் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து – கைநழுவிப் போகும் அமைதி உடன்படிக்கை, தீர்வு என்ன?

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் நீபியு ரியோவும், ​​இணை ஒருங்கிணைப்பாளர்களாக துணை முதலமைச்சர் ஒய் பாட்டன் மற்றும் சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவர் டி.ஆர்.ஜெலியாங்கும் செயல்படவுள்ளனர்.

பல ஆண்டுகளாக கோரப்பட்டு வரும் நாகாலாந்து தனி நாடு பிரச்சினை தொடர்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான்கு அம்ச தீர்மானம் நாகாலாந்து சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசிற்கும் நாகாலாந்து விடுதலை குழுக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளித்து, ஒன்றிணைக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்