Aran Sei

ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்

ர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை பாதுகாப்புப் படைகளுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்க வேண்டாம் என்று நாகா மக்களை நாகா மாணவர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று, இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் வேகமாக ஒலிக்க துவங்கின.

நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக மார்ச் 31ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு அறிவித்தது.

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில், 1958ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ‘அமைதிக்குறைவான பகுதிகள்’ என்று குறிப்பிடும் இடங்களில், இந்திய ஆயுத படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.

இந்நிலையில், நாகா மாணவர் கூட்டமைப்பு நேற்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகா மண்ணின் பெரும்பாலான பகுதிகளில் மனிதாபிமானமற்ற ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ நடைமுறைப்படுத்த அனுமதிக்கும் அதே வேளையில், சில பகுதிகளிலிருந்து மட்டும் அச்சட்டத்தை நீக்குவதன் வழியாக வடகிழக்கு மக்களின் சில பிரிவினரை மகிழ்விக்கும் இந்திய அரசின் சூழ்ச்சியை நாகா மாணவர் கூட்டமைப்பு முற்றிலும் நிராகரிக்கிறது” என்று கூறியுள்ளது.

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

நாகாலாந்து தவிர அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நாகா மக்கள் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

நாகா தாயகத்தின் பெரும்பகுதி இன்னும் ‘அமைதிக்குறைவான  பகுதிகள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நாகா மாணவர் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

“வடகிழக்கின் சில பகுதிகளில் இருந்து மட்டும் அச்சட்டத்தை நீக்குவதற்கு என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன?” என்று நாகா மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்