Aran Sei

மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலையில் பெண்கள் வெளியே செல்ல தடை – எதிர்ப்பு வலுத்ததால் உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம்

ர்நாடக மாநில மைசூர் பகுதியில் எம்.பி.ஏ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்  பெண்கள் மாலை வெளியே செல்லக்கூடாதென அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.

ஆனால், அப்பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எந்தத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

மைசூர் அருகில் உள்ள சாமுண்டி பகுதியில் எம்.பி.ஏ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட உத்தரவில்,  “பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குக்கரஹள்ளி ஏரிப்பகுதிக்கு 6.30 மணிக்கு மேல் மாணவர்கள் செல்லக் கூடாது. மேலும், பாதுகாப்பு அலுவலர்கள் 6 மணி முதல் 9 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில்,பெண்கள். 6. 30 மணிக்குமேல் தனியாக அமரக்கூடாது  என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து தெரிவித்திருந்த பல்கலைக்கழக  துணைவேந்தர் ஹேமந்த் குமார், “பல்கலைக்கழக வளாகங்களில் தனியாகச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புநலன் குறித்த காவல்துறையினர் வெளிப்படுத்திய அக்கறையின் அடிபடையிலயே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும், “வளாகத்தில், பெண் மாணவர்களுக்குத் தனியாகச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் நண்பருடன் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்பினோம். பதிவாளரின்  தரப்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் வார்த்தைகள் தவறாகப் போய்விட்டன. நான் அதை சரிசெய்கிறேன், ” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களில் திரும்பப் பெறப்பட்டுள்ளது

source:தி வயர்

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்