Aran Sei

திருமாவளவனை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: திருமாவளவனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் “நாங்கள் படித்தவர்கள்” ஹேஷ்டேக்

மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் - Image credit - thewire.in

ரக்கோணம் அடுத்த சோகனூரில் நடைபெற்ற மோதலில் பட்டியலினத்தை சேர்ந்த அர்ஜூன், சூர்யா என்ற இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் என 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேர்தலின்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக இந்தக் கொலைகள் நடைபெற்றதாகவும், இது ஒரு சாதிய கொலை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

இணையத்தில் பரவும் கேரளா மருத்துவ மாணவர்களின் நடனம் – ‘லவ் ஜிகாத்’ என மிரட்டும் இந்துத்துவ அமைப்பினர்

இது ஒரு சாதியக் கொலை என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நேற்று (பிப்ரவரி 10) அனைத்து  மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

இந்த நிலையில், காணொளி வெளியிட்டிருக்கும் பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், “இந்தக் கொலை சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய் தகவலைப் பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை. அவர் அம்பலமாகிவிட்டார்” என அதில் பேசியிருந்தார்.

அன்புமணியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் #MyLeaderThiruma என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

இந்தஹேஷ்டேக்கின் கீழ் ’நாங்கள் படித்தவர்கள்’ எனக்கூறி அவர்கள் வாங்கிய பட்டங்களுடன் சேர்த்து திருமாவளவனை ஆதிரிக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்