Aran Sei

குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாதீர்கள் – காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டிய கன்னியாஸ்த்ரி

போராட்டக்காரர்கள் மீது மியான்மர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை நிறுத்தக் கோரி, கன்னியாஸ்த்ரி ஒருவர் காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டியுள்ளார்.

மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி (நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி, என்.எல்.டி) பெரும்பான்மையான இடங்களில் வென்றது.

ஆனால், “தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது, மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படும்” என்று இராணுவம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ராணுவம், ஆங் சாங் சூகியை கைது செய்ததுடன், நெருக்கடி நிலையை அமல்படுத்தியது. மியான்மரில் நிலவும் அசாத்தியமான நிலைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வருத்தம் தெரிவித்துள்ளன.

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்ப்பது இது முதல் முறையல்ல. 1948 ஆம் ஆண்டு, மியான்மர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே அந்நாடு, நீண்ட காலம் இராணுவ ஆட்சியின் கீழ் தான் இருந்து வந்தது.

பிப்ரவரி 1 ஆம் தேதி, ஆங் சான் சூ கியின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை ராணுவம் கட்டுப்படுத்தியதில் இருந்து, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பிப்ரவரி 28 ஆம் தேதி நிகழ்ந்தது.

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கியின் ஆட்சியை, மீண்டும் அமைக்கக் கோரி பேராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, ராணுவ ஆட்சியினர் மேற்கொண்டு வரும் வன்முறையில், தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், “ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக அமைதியான முறையில் போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, ஆபத்தான அல்லது மூர்க்கத்தனமான சக்திகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று, நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய துணை இயக்குநர் பில் ராபர்ட்சன் கூறியிருந்தார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு – ஐநா மனித உரிமை அலுவலகம் தகவல்

இந்நிலையில், மியான்மரின் யிட்கினியா பகுதியில், மியான்மர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நிறுத்தக் கோரி, கன்னியாஸ்த்ரி ஒருவர், காவல்துறையினரிடம் மண்டியிட்டு வேண்டியுள்ளார்.

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

வெள்ளை உடை அணிந்திருக்கும் ஏன் ரோஸ் நு தாங் எனும் கன்னியாஸ்த்ரி, வீதியில் மண்டியிட்டு காவலரிடம் கெஞ்சும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாஸ்த்ரியின் நடவடிக்கையை கண்டு, இரண்டு காவலர்களும் கன்னியாஸ்த்ரி முன்பு மண்டியிட்டுள்ளனர்.

”நான் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிடாதீர்கள் என வேண்டினேன். இங்கு எந்த பிரச்சனையையும் நான் பார்க்க விரும்பவில்லை, காவல்துறை திரும்பாவிடில் நானும் திரும்ப மாட்டேன்” என்று ஏன் ரோஸ் நு தாங் கூறியுள்ளார்.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

கடந்த மாதமும், காவல்துறையினரிடமும், போராட்டக்காரர்களிடமும் அமைதியைக் கோரி அந்த கன்னியாஸ்த்ரி போராடியதாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் ராணுவம் நடத்திய ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1800 க்கும் மேற்பட்டோர் சிறைபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்