Aran Sei

‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதிலிருந்து கடந்த மார்ச் 28 வரை 459 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2559 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டடீஸ்டா எனும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

கடந்த பிப்ரவரி 21 அன்று மியான்மர் அரசைக் கலைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், மக்கள் பிரதிநிதிகளான ஆங் சங் சுகி மற்றும் குடியரசுத்தலைவர் வின் மயின்ட் ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய சில தினங்களிலேயே மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாதீர்கள் – காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டிய கன்னியாஸ்த்ரி

இந்நிலையில் கடந்த மார்ச் 28 வரை 459 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2559 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டடீஸ்டா அறிக்கை கூறுகிறது.

SOURCE- STATISTA

மேலும், கடந்த மார்ச் 27 அன்று மியான்மார் ராணுவ தினத்தன்று மட்டும் குழந்தைகள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு – ஐநா மனித உரிமை அலுவலகம் தகவல்

ராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்த மியிஞ்ஞான் பகுதி மக்கள், “ராணுவம் குருவிகளைச் சுடுவது போல எங்களைச் சுட்டு தள்ளுகிறது. ஆனாலும், எங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் ” என்று கூறியுள்ளார்.

SOURCE: STATISTA

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்