Aran Sei

மியான்மரில் காலவரையற்று இணையத்தை முடக்கிய ராணுவம் – மக்கள் போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் அந்நாட்டில் இணையத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 21 அன்று மியான்மர் அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

இந்நிலையில், அந்நாட்டின் மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், அடுத்த அறிவிப்பு வரும்வரை காலவரையற்று இணையம் முடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இதுவரை 529 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மர் அகதிகளுக்கு உதவ தடை விதிக்கும் உத்தரவு– ஐநா கோரிக்கையை ஏற்று திரும்ப பெற்ற மணிப்பூர் அரசு

மேலும், ராணுவம் அங்குள்ள பெரும்பாலான ஊடகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, இந்நிலையில் இணையத்தையும் முடக்கி உத்தரவிட்டுள்ளது.

SOURCE: NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்