Aran Sei

உதய்பூர்: என் தந்தையின் கொலைக்கு காவல்துறை தான் காரணம் – கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் குற்றச்சாட்டு

Creidit: Puthiyathalaimurai

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், தையல்காரர் கன்னையா குமார் கொல்லப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என்று அவரது மகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்திருந்த பாஜகவில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக தையல்காரர் கன்னையா லாலை இருவர் கொலை செய்தனர்.

இந்நிலையில் அவருக்கு வந்த மிரட்டல்கள் தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

”சமூக வலைதளங்களில் எனது தந்தை தவறுதலாக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டு, கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றார். சமரச சந்திப்பின்போது காவல்நிலையத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அதற்காக பலமுறை காவல்துறையை அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்கள் தந்தை இன்று உயிருடன் இருந்திருப்பார்,” என்று கன்னையா லாலின் மகன்கள் யாஷ், தருண் ஆகியோர் கூறியுள்ளனர்.

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரயாக்ராஜ் வன்முறை: பர்வீன் பாத்திமாவின் மனுவை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம்

”மிரட்டல் அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து, எங்கள் தந்தை ஐந்து முதல் ஆறு நாட்கள் கடையை மூடிவிட்டார். ஒருவர் கடைக்கு வந்து மிரட்டிவிட்டு சென்றார். நான் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரர் தருண் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக உள்ளார். குடும்பத்தில் சம்பாதித்த ஒரே நபர், தந்தை மட்டுமே. அவரும் தற்போது இல்லை என்று மூத்த மகன் யாஷ் கூறியுள்ளார்.

Source: Puthiyathalaimurai

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்