Aran Sei

‘எனது இஸ்லாமிய நம்பிக்கை சக ஊழியர்களுக்குப் பிடிக்கவில்லை’ – பதவிநீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்தின் முதல் இஸ்லாமிய பெண் அமைச்சர் விமர்சனம்

2020 பிப்ரவரியில் இங்கிலாந்தின் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற 49 வயதான நுஸ்ரத் கானி இப்போது அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனது இஸ்லாமிய நம்பிக்கை சக ஊழியர்களைச் சங்கடத்தில் ஆழ்த்தியதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

“இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் நடந்த மறுசீரமைப்பு கூட்டத்தில் நான் ஒரு இஸ்லாமியர் ‘ என்பது ஒரு ‘பிரச்சினையாக’ எழுப்பப்பட்டது. எனது ‘இஸ்லாமியப் பெண் அமைச்சர்’ என்ற எனது அந்தஸ்து சக ஊழியர்களைச் சங்கடப்படுத்துகிறது என்றும் என்னிடம் கூறப்பட்டது” என்று இங்கிலாந்தின் முதல் இஸ்லாமியப் பெண் அமைச்சர் நுஸ்ரத் கானி கூறியுள்ளார்.

“இது கட்சியின் மீதான எனது நம்பிக்கையைப் பாதித்துள்ளது, மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இன்னும் நீடிக்கலாமா என்று கூட சில சமயங்களில் தீவிரமாக யோசித்துள்ளேன் என்று நுஸ்ரத் கானி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் இப்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி இதற்கு முன்பே இஸ்லாமோபோபியா குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய புகார்களை அக்கட்சி எவ்வளவு மோசமாகக் கையாள்கிறது என்று கடந்தாண்டு மே மாதம் வெளியான ஒரு அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது என்று என்.டி.டி.வி கூறியுள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்