தனது அரசியல் நிலைப்பாடு பல்கலைக்கழகத்திற்கு பாதிப்பாக கருப்படுவதால், ராஜினாமா செய்ததேன் என அரசியல் விமர்சகரும், அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான, பிரதாப் பானு மேத்தா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய் ( மார்ச் 16) அன்று பிரதாப் மேத்தாவின் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனும் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் மோடி அரசு மற்றும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் பிரதாப் மேத்தா, பல்கலைக்கழக துணைவேந்தர் மாலபிகா சர்காருக்கு எழுதிய கடித்தத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நலனைக் கருதி ராஜினாமா செய்திருப்பதாக கூறிய அவர், “அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு கடமைகளை மதிக்கும் முயற்சியாக, நான் பொதுத்தளத்தில் எழுதி வருவது, பல்கலைக்கழகத்திற்கு பாதிப்பாக பார்க்கப்படுகிறது” என அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அசோகாவை விட்டு நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு தாராளவாத பல்கலைக்கழகம் தழைப்பதற்கு தாராளவாத அரசியல் மற்றும் சமூக சூழல் தேவைப்படும். அந்தச் சூழலைப் பாதுகாப்பதில் பல்கலைக்கழகம் ஒரு பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்” என பிரதாப் பானு மேத்தா குறிப்பிட்டிருந்தாக தி வயர் கூறியுள்ளது.
“ஒரு பல்கலைக்கழகத்தில் சத்தியத்திற்காக வாழ முடியாது.” என நீட்டே கூறியதை மேற்கோள் காட்டிய பிரதாப், ”நான் தீர்க்கதரிசனம் உண்மை இல்லை என்று நம்புகிறேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், அசோகாவின் மதிப்புகளுக்குப் புதிய அர்ப்பணிப்பும், அசோகாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க புதிய தைரியமும், நிறுவனர்களுக்கும் நிர்வாகத்துக்கும் தேவைப்படும்” என கூறியுள்ளார்.
“மேத்தாவின் ராஜினாமா காரணமாகவே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகிறேன், இனி கல்வி சுதந்திரத்தை பாதுகாக்க முடியாது” என தனது ராஜினாமாவிற்கான காரணமாக அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு
அசோகா பல்கலைக்கழகத்தின் 90 ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் பகிரங்கமாக மேத்தாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு, அவரை மீண்டும் பணிக்கு வருமாறு நிர்வாகம் அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.