Aran Sei

முசாஃபர்நகர் கலவர வழக்கில் 6 பேர் விடுதலை: ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பு

credits : the indian express

முசாஃபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் 6 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததால், உள்ளூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், உத்தர பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில், இந்துக்களுக்கும் (ஜாட் சமுதாயத்தினர்) இஸ்லாமியர்களுக்கும் இடையே உண்டான மோதல் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 60 க்கும் (40 இஸ்லாமியர்கள், 20 இந்துக்கள்) மேற்பட்டோர் பலியாயினர், 93 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்குப் பிறகு 50,000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், உத்தர பிரதேச வரலாற்றில் இது மிகப்பெரிய வன்முறையாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் – எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த கும்பல்

முசாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கசிமுத்தின் எனும் நபர், ”வீட்டிலிருக்கும் அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு, வீட்டிற்கு தீ வைத்தனர்” என்று அளித்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

‘கலவரம் செய்யும் துரியோதனனும் துச்சாதனனும் நமக்கு வேண்டாம்’ – பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, உமேஷ், தேவேந்திரா, பிண்டு, லலுத் குமார், வினோத், அரவிந்த் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ ( சாதி மற்றும் இன ரீதியாக இரு குழுக்களிடையே பிரச்சனையை உண்டாக்குவது ), 147 ( கலவரம் ), 392 ( திருட்டு ), 436 ( தீ வைத்தல்) ஆகியவற்றின் கீழ் கைது செய்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின், உள்ளூர் நீதிமன்றத்தில் கூடுதல் சிறப்பு நீதிபதி நிஷாந்த் தேவ் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி, குற்றத்தை நிருபிக்க போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க்ப்படாததால், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஆறு பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்