Aran Sei

முதுமலை வனச்சரகத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பெண் புலி – இருவர் கைது

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலிக்கு விஷம் வைத்துக் கொன்ற இருவரை தமிழக வனத்துறை கைதுசெய்துள்ளது.

கடந்த நவம்பர் 2020 அன்று, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்கார வனப்பகுதியில் சீமான்குழி ஓடை பகுதியில் இறந்த நிலையில் 7 வயது மதிக்கத் தக்க பெண் புலி கண்டெடுக்கப்பட்டது.

நீலகிரி பழங்குடிகளிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் – இடப்பெயர்வு காரணமா?

இதனை தொடர்ந்து அந்தப் பெண் புலியின் உடலைச் சோதித்ததில் விஷத்தால் இறந்தது கண்டறியப்பட்டது, மேலும் அதன் 2 ஆண் குட்டிகள் வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கரியன் மற்றும் அஹமத் கபீர் என்ற இருவரை வனக்காவல் துறை கைதுசெய்துள்ளது.

யானை வழித்தடம் : “காட்டுக்குள் ரிசார்ட்டுகளுக்கு என்ன வேலை?” – உச்சநீதி மன்றம்

கைதுசெய்யப்பட்ட இருவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண் புலி அவர்களது கால்நடையைத் தொடர்ந்து வேட்டையாடியதால் அந்தப் புலிக்கு விஷம் வைத்துக் கொன்றதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SOURCE; THE INDIAN EXPRESS 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்