Aran Sei

மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக தடுப்பூசி பலனளிக்கிறதா? – சி.சி.எம்.பி மையம் ஆய்வு

செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள், மாறுபாடடைந்த கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்குப் பயனளிக்கும் என ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  தகவல் தெரிவித்துள்ள அந்த மையத்தின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா , B.1.617 வைரஸ்  வகை உட்பட மற்ற பிற நோய்க்கிருமி வகைகளையும் ஆராயவுள்ளதாகவும் , அதற்கு பத்து நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

துரிதமாக அரசு செயல்படாவிட்டால் கொரோனா இரண்டாம் அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் – ப்ளூம்பெர்க் ஆய்வில் தகவல்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர் , “இது மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வு அல்ல, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் அல்லது நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, நோய் எதிர்ப்புத் திறனை ஆய்வு செய்கையில், ஒருவேளை நோய்க்கிருமியால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் தடுப்பு மருந்து வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் – என்ன செய்ய போகிறோம் நாம்?

மேலும் , வரும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருக்கும் நிலையில், இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் அடையும் என்றும் அறிவியலாளர் ராகேஷ் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஐந்து சதவீதம் மாதிரிகளை சேகரிக்க உள்ளதாகவும் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ரெம்டிசிவிர் தடுப்பு மருந்தை சட்டப்படி முறைப்படுத்த வேண்டும் – இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள்

தேசிய வைராலஜி நிறுவனமும் இந்த ஆய்வில் இணைந்துள்ளதாகவும், இந்த ஆய்விற்கு 10 நாட்கள் ஆகுமென்றும், எந்த ஆய்வு மையமும் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா, இந்த ஆய்வு முடிவுகள் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை , கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்