Aran Sei

விவசாயத்திற்கு மாடு வாங்கிச்சென்ற இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல் – காஷ்மீரில் பயங்கரம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில், விவசாய நிலத்தில் உழுவதற்காக இரண்டு காளை மாடுகளை வாங்கி சென்ற இரண்டு இஸ்லாமியர்களை, ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளயுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

கடந்த மே 6 ஆம் தேதி, கோர்டா கிராமப்பகுதியில் இரண்டு காளை மாடுகளை கூட்டிக் கொண்டு, இரண்டு இஸ்லாமியர்கள் தங்களது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த 15 முதல் 20 பேர் அந்த இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான அமீர் ஹுசைன், முகமது சித்திக் ஆகிய இருவரும், அந்த கும்பல் அவர்களை 90 நிமிடத்திற்கும் மேலாக தாக்கியதாக தி வயர் -யிடம் தெரிவித்துள்ளனர்.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

மேலும், தங்களை மாடு விற்பனையாளர்கள் என்றும் ஸ்ரீநகர் பகுதியில் மாடுகளை விற்கப் போகிறீர்கள் என்றும் அந்த கும்பல் கூறியதாகவும் , “நாங்கள் மாடு விற்பனையாளர்கள் இல்லை” என்று தெரிவித்ததை காதில் வாங்காமல் தாக்கியதாகவும், அவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவரும் ஜம்மு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தலைப்பகுதியில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களுக்குக் காவல்துறை சான்று பெறாவிட்டால் வேலை கிடையாது – ஜம்மு காஷ்மீர் அரசு

அந்த இருவரையும் தாக்கியதை, பசுக்காவலர்கள் என்று அறியப்பட்ட அந்த கும்பல், காணொளியாக பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தி வயர் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்