Aran Sei

பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்திருப்பது இஸ்லாமியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது – அமைச்சர் நிலோஃபர் கபில்

ணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியால் தான், தனக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற நிலோஃபர் கபிலுக்கு, இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிலோஃபர் கபில், நடாளுமன்ற தேர்தலில், வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளுரும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு வாக்களிக்க, இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டதாக, தன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதில் உண்மையில்லை என்றும், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், இஸ்லாமியர்கள் அதிமுக மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறியுள்ள நிலோஃபர் கபில், ஆகவே, அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்காவிட்டால் அதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்று நிலோஃபர் கபில் கூறியுள்ளார்.

டெண்டர் மற்றும் ஒப்பந்தப் பணி போன்ற விவகாரங்களில், கே.சி.வீரமணியும், திமுக பொதுச் செயலளார் துரைமுருகனும் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள நிலோஃபர் கபில், வீரமணிக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜூக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுகவுடன் கே.சி.வீரமணி நெருங்கிய நட்பில் இருப்பதாக கூறியுள்ள நிலோஃபர் கபில், அதன் காரணமாகவே துரைமுருகன் எளிதாக ஜெயிப்பதற்கு வழிவகுக்கும் வகையில், காட்பாடி தொகுதி ராமு என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்