Aran Sei

தேஜஸ்வி சூர்யா புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் – மீண்டும் பணி வழங்க பெங்களுரு பெருநகராட்சி முடிவு

கொரோனா படுக்கைகள் ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா புகாரின் பெயரில் பணீநீக்க செய்யப்பட்ட 16 இஸ்லாமியர்களுக்கு, இந்த வாரத்தில் மீண்டும் பணி வழங்கப்படவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

”பணீநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்படும், ஆனால் அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்பதை அவர்கள் பணிபுரியும் ஏஜென்சியே முடிவு செய்யும்”என பெங்களுரு பெருநகராட்சியின் (பிபிஎம்பி) தென் மண்டல சிறப்பு ஆணையர் துளசி மதிநேனி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஊழியர்களைப் பணியமர்த்திய, கிரிஸ்டல் இன்போசிஸ்டம்ஸ் அண்ட சர்வீஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது அவர்கள் பதிலளிக்க வில்லை என தி இந்து கூறியுள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி – சீன செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

பெங்களுரு தென் மண்டல கட்டுப்பாடு அறையில் பணியாற்றும் ஊழியர்களில் ஒருவரான ஆயிஷா, ”எங்களுக்குப் மீண்டும் பணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தாலும், எங்கு பணியமர்த்தப்படுவோம் என்று தெளிவாக சொல்லப்படவில்லை. மீண்டும் தென் மண்டல கட்டுப்பாட்டு அறைக்குப் பணியமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். நாங்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு பணியிலிருந்து அகற்றப்பட்டோம்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களுருவில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்குள் கடந்த வாரம் நுழைந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கு பணியாற்றி வந்த 16 இஸ்லாமியர்களின் பெயரைக் குறிப்பிட்டு, படுக்கை ஒதுக்கீடு முறைகேட்டில் அவர்கள் பங்குகுறித்து கேள்வி எழுப்பினார். அவர்கள் பணிக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி – சீன செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

இதுகுறித்து விசாரித்த கர்நாடக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் குற்றமற்றவர்கள் என சான்றிதழ் அளித்தால் மட்டுமே மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அவர்களைப் பணியமர்த்தியிருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்