Aran Sei

இந்துவை திருமணம் செய்த இஸ்லாமியப் பெண்: இந்துவாக மதம் மாறாதவரை திருமணம் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு

ந்துவாக மதம் மாறும்வரை முஸ்லிம் பெண்ணுடன் இந்து ஆணுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த 18 வயது இஸ்லாமிய பெண் ஒருவரும், 25 வயது இந்து ஆண் ஒருவரும் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணத்துக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தங்களது உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பாலா பகுதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளனர். காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்காததால் பாதுகாப்பு கோரி, தம்பதிகள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

மனுவை விசாரித்த நீதிமன்றம் , “இஸ்லாமிய பெண், இந்து ஆணை திருமணம் செய்துகொண்டாலும், அந்தப் பெண் இந்துவாக மதம் மாறாதவரை திருமணம் செல்லாது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் திருமண வயதை எட்டியிருப்பதால் ஒருமித்த உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்  என்று தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அம்பாலா காவல்துறை கண்காணிப்பாளர் வழங்க உத்தரவிட்டனர்.

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு மீண்டும் கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

கடந்த மாதம், இதே நிதிமன்றம், ஒரு இஸ்லாமிய சிறுமியின் குழந்தைத் திருமணத்தை உறுதிப்படுத்தியது , இஸ்லாமிய சட்டம் சிறுமிகளைப் பருவ வயது அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Source: India today

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்