Aran Sei

ஆதார் அட்டையைக் கேட்டு இஸ்லாமியாரைத் தாக்கிய இருவர்- காவல்துறை வழக்குப் பதிவு

த்தியபிரதேச மாநிலம் தேவஸ் நகரில்  சாலையோரம் சிற்றுண்டி விற்று வந்த இஸ்லாமியரை ஆதார் அட்டைக்கேட்டு இருவர் தாக்கியுள்ளனர்.

அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் வளையல் விற்பனை செய்த 25 வயதான இஸ்லாமியரை ஒரு குழுவினர் தாக்கிய சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு தற்போது தெரியவந்துள்ளது.

அமல்டாஸ் பகுதியைச் சார்ந்த  சிற்றுண்டி  விற்று வரும் ஜாகிர் கானிடம்  இருவர் ஆதார் அட்டை கேட்ட நிலையில், அவர் ஆதார் அட்டை இல்லை என்று கூறவே அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜாகிர், “அவர்கள் போர்லி கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களை முன்பு நான் அந்தக் கிராமத்தில் பார்த்துள்ளேன்.அவர்களின் முகத்தை வைத்து அவர்களை நான் நினைவு கூர்ந்தேன். அவர்கள் கிராமத்திற்குள் மீண்டும் நுழையக் கூடாது என்று எச்சரித்தனர்”   என்று குறிபிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜாகிர் கான் காவல்நிலையத்தில் புகார் அழைத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு  294 (துஷ்பிரயோகம்), 323 (புண்படுத்தும்), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

source:தி வயர்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்