Aran Sei

‘நாகரீக சமூகத்திற்கு ஏற்றதல்ல’ – ஹரித்வார் வெறுப்பு பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸின் இஸ்லாமிய பிரிவு கண்டனம்

ரித்வார் தர்ம சன்சத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் சரியல்ல என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமியர்கள் பிரிவான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா, மொராதாபாத் மற்றும் ராம்பூர் மாவட்டங்களில் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (எம்ஆர்எம்) இன் 10 பேர் கொண்ட குழு, பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டது. அக்குழுவில் தேசிய ஒருங்கிணைப்பாளர் எம்.டி. அக்தர், அமைப்பின் மதரஸா பிரிவு தலைவர் மஜஹர் கான் மற்றும் உத்தரகாண்ட் மதரஸா வாரியத் தலைவர் பிலால் உர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

“அண்மையில் உத்தரகாண்டில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கூறிய கருத்துகள், சமூகத்தில் வளர்ந்து வரும் விரோதப்போக்கை காட்டுகிறது. இது குறித்து கவலை தெரிவிக்கிறோம்.  தர்ம சன்சத்தில் பேசப்பட்டவை எந்த நாகரீக சமுதாயத்திற்கும் சரியல்ல என்று உணர்ந்திருக்கிறோம்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அரசாங்கத்திற்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ இது போன்ற எந்தவொரு தர்ம சன்சத் நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்சானது அத்தகையவர்களை ஆதரிக்காது. அவர்களின் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறது” என்று முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Hindu 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்