இஸ்ரேல் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டத்தற்காக உத்திரபிரசத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் யாசர் அராஃபத்தை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு உத்திரபிரதேசத்தில் உள்ள அசார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் அராஃபத்தின் பாலஸ்தீன ஆதரவு பதிவுகள் இஸ்ரேல் ஆதரவு இந்தியார்களால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், மே 20 ஆம் தேதி அராஃபத்தை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
மே 21 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்த அராஃபத், அதிர்ச்சியில் இருப்பதாகவும், கைது அனுபவம் அவருக்கு மிகவும் பயங்கரமாக இருந்திதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அசாம்கர் என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றை நடத்தி வரும் அராஃபத், அதில் உள்ளுர் செய்திகளுடன் சேர்த்து சில சமயங்களில் சொந்த செய்திகளையும் பதிவிட்டு வருகிறார். அதைப் போன்று வரவிருக்கும் வெள்ளியன்று காசாவில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் வாகனங்களில் பாலஸ்தீன கொடி பறக்கும் என பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை, அசாம்கரில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அவர்களுது வீடு மற்றும் வாகனங்களில் பாலஸ்தீன கொடி ஏற்ற அராஃபத் கேட்டுக் கொண்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
இதற்கு அராஃபத் உடனடியா விளக்கமளித்த நிலையிலும், இஸ்ரேலை ஆதரிக்கும் இந்தியர்கள் அவரை விமர்சனம் செய்தனர். இதற்கு அடுத்த சில மணிநேரங்களில் உத்திரபிரதேச காவல்துறையினரால் அராஃபத் கைது செய்யபட்டார்.
முகநூல் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து அதை உடனடியாக நீக்கியதோடு, தன்னிலை விளக்கம் ஒன்றை அராஃபத் அளித்த நிலையில், திட்டமிட்டு பரப்பட்ட விமர்சனங்களால், இந்தச் சம்பவத்திற்கு வகுப்புவாத சாயம் பூசப்பட்டது என அராஃபத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
“என் சகோதரர் நிரபராதி, அதிகாரத்தில் இருப்பவர்களைத் திருப்தி படுத்தவே காவல்துறையினர் என் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.” என அராஃபத்தின் சகோதரர் ஷாகித், தி வயர் இணையத்திளத்திடம் தெரிவித்துள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.