மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் வளையல் விற்பனை செய்த 25 வயதான இஸ்லாமியரை ஒரு குழுவினர் தாக்கியதோடு, அவரிடம் இருந்து ரூ.10,000 பணத்தையும் திருடியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே கூடிய பின்னரே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தாக்குதல் காணொளியில், பாதிக்கப்பட்ட தஸ்லீம் என்பவர் இந்தூரின் பங்காங்கா பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்படுகிறார். தெருவில் பொதுமக்கள் அதிகம் இருந்தாலும், அவர்கள் யாரும் அத்தாக்குதலைத் தடுக்க முயலவில்லை. தஸ்லீம்மீது மதரீதியிலான அவதூறுகளை, தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவதாக அக்காணொளியில் இருந்து அறியப்படுகிறது.
ये वीडियो अफगानिस्तान का नहीं बल्कि आज इंदौर का है, @ChouhanShivraj जी के सपनों के मध्यप्रदेश में एक चूड़ी बेंचने वाले मुसलमान का सामान लूट कर सरेआम भीड़ से लिंचिंग करवाई जाती है ।@narendramodi जी क्या यही भारत बनाना चाहते थे आप ?
इन आतंकियों पर कार्यवाही कब ? pic.twitter.com/fsA5fLqNaD
— Imran Pratapgarhi (@ShayarImran) August 22, 2021
“நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், இவன் இனி இந்த பகுதியில் இருக்கக் கூடாது” என்று ஒருவர் கூறியவாரே, தஸ்லீமின் பையில் இருந்து வளையல்களை வெளியே எடுத்து எறிவதாகவும் மேலும், தஸ்லீமை தாக்குமாறு மற்றவர்களுக்கு அவர் கட்டளையிட, அதைத் தொடர்ந்து மூன்று தொடங்கி நான்கு பேர் வரை இரக்கமின்றி அவரைத் தாக்குகிறார்கள் எனவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் மிஸ்ரா, பாதிக்கப்பட்டவர் இந்து பெயரைப் பயன்படுத்தி வளையல்களை விற்றார் என்று கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. மேலும், “அவர் வெவ்வேறு பெயர்களில் இரண்டு ஆதார் அட்டைகளை வைத்திருந்தார்.” என்றும் அமைச்சர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் தஸ்லீம் அளித்த புகாரில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் என் பெயரை கேட்டார்கள். நான் பெயரை சொன்னவுடன் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். நான் எடுத்துச் சென்ற ரூ .10 ஆயிரத்தை அவர்கள் கொள்ளையடித்ததோடு, என்னிடம் இருந்த வளையல்கள் மற்றும் பிற பொருட்களையும் உடைத்துவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றது, தாக்குதல் நடத்தியது, கொள்ளை மற்றும் மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்தூர் காவல்துறை அதிகாரி ஒருவர், “புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காணொளியைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தேடும் பணியில் உள்ளோம். அவர்கள்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
Source: NDTV, thewire.in
தொடர்புடைய பதிவுகள்:
பாஜக நிர்வாகியாக இருந்தும் இஸ்லாமியர் என்பதால் கைவிடப்பட்டேன் – சிறைபட்ட பாஜக உறுப்பினரின் கதை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.