மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் செக்லி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடக் கோரி தாக்கியது தொடர்பாக இரண்டு பேரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்யும் இஸ்லாமியர், வேலைக்கு செல்லும் போது இடைமறித்த இருவர், அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடக் கோரி தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இஸ்லாமியரின் பொருட்களை தூக்கி எறிந்த இளைஞர்கள், அவரை கிராமத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம் எனக் கூறுவது காணொளியில் பதிவாகி உள்ளது.
”பாதிக்கப்பட்டுள்ளவர் அளித்துப் புகாரின் பெயரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று சமூகத்திற்கு தெரிவிக்கும் வகையில் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என மஹித்பூர் துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஆர்.கே. ராய் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கமல் மற்றும் ஈஸ்வர் என்ற இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக உஜ்ஜைனியின் காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் சுக்லாவால் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.