Aran Sei

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

த்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய முதியவர் அப்துல் சமத்தை தாக்கிய கும்பல், அவரது தாடியை மழித்துள்ளது.

ஆட்டோவிலிருந்து இறங்கியவரை அருகில் இருந்த காட்டில் இருக்கு குடிசைக்கு கடத்தி சென்ற கும்பல், ’ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் ’வந்தே மாதரம்’ என முழங்கக் கோரி தடிகளால் தாக்கியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் நிர்வாணமாக செல்லவேண்டுமென்று தண்டனைக்குள்ளான பழங்குடியினப் பெண் – சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை

சமத்தை ஒரு பாகிஸ்தான் உளவாளி என  அந்தக் கும்பல் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த கத்தியைக் கொண்டு வலுக்கட்டாயமாக, சமத்தின் தாடியை மழித்துள்ளார்.

சமத் தன்னை தாக்குபவர்களிடம் விடுவிக்கக் கெஞ்சும் காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், ஏன் மதரீதியாக குடியுரிமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது – ஒன்றிய அரசுக்கு ஐ.யூ.எம்.எல் கேள்வி

”நான் தொழுகைக்கு செல்லும் வழியில் லிப்ட் கொடுக்கப்பட்டு, ஆட்டோவில் ஏற்றப்பட்டேன். பிறகு இருவர் ஆட்டோவில் ஏறிக்கொண்டதை அடுத்து ஆட்டோ காட்டில் இருக்கும் குடிசை நோக்கிச் சென்றது. அந்தக் குடிசையில் என்னை உள்ளே வைத்துப் பூட்டி வைத்துத் தாக்கினர். என்னை ’ஜெய் ஸ்ரீராம்’, ’வந்தே மாதரம்’ முழங்கங்களை எழுப்புமாறு கட்டாயப்படுத்தினர்.  அவர்கள் என் செல்போனை பறித்துகொண்டதோடு, வலுக்கட்டாயமாக என் தாடியை மழித்தனர்.” என பதற்றத்துடன் கண்ணீர் வடிய நடந்ததை சமத் விவரித்துள்ளார்.

”மற்ற இஸ்லாமியர்கள் தாக்கிய காணோளிகளை எனக்குக் காண்பித்தனர். இதற்கு முன்னர் பல இஸ்லாமியர்களை கொன்றிருப்பதாகவும் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்.சி,எஸ்.டி சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு முக்கிய குற்றவாளியான பிரவேஷ் குஜ்ஜாரை கைது செய்த காவல்துறையினர், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

லோனியை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி அதுல் குமார் சொன்கார், வழக்கு தொடர்பான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்