Aran Sei

இஸ்லாமியரை கொலை செய்த இந்துத்துவாவினர்: கர்நாடகாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் உச்சமடைகிறதா?

னவரி 17 அன்று சமீர் சுபன்சாப் ஷாபூர் (20) மற்றும் அவரது நண்பர் ஷம்சீர் கான் பதான் (22) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் முடிதிருத்தும் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​ஆர்எஸ்எஸ்  மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது என தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளதாகச் கூறப்படுகிறது.
நர்குண்ட் நகரில் 10 முதல் 12 இந்துத்துவாவினர், சமீர் சுபன்சாப் ஷாபூரின் நெஞ்சில் கத்தியால் குத்தியதாகவும், ஷம்சீர் கான் பதானின் முதுகில் கத்தி மற்றும் கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 18 அன்று காலை 6 மணியளவில் சமீர் சுபன்சாப் ஷாபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதே சமயம் அவரது நண்பர் சமீர் சுபன்சாப் பதான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
https://www.aransei.com/news/in-karnataka-christian-worship-continue-to-come-under-attack/
இத்தாக்குதல் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்கில் சஞ்சு நளவாடி, மல்லிகார்ஜுன் ஹிரேமத், சன்னபசப்பா அக்கி மற்றும் சக்ரப்பா கக்கனூர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தி வயர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 17 அன்று, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பஜ்ரங் தள உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து பஜ்ரங் தள அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பேசப்பட்டதாகச் கூறப்படுகிறது என்று தி வயர் குறிப்பிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டப் பிரிவுகள் 143 (சட்டவிரோத கூட்டம்), 147 (கலவரம்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுவது), 341 (ஒரு நபரைத் தவறான கட்டுப்படுத்தி வைத்தல்), 323 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்களால் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல்), 307 (கொலை முயற்சி) மற்றும் 302 (கொலை) ) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
“சில மாதங்களுக்கு முன் சமீர் சுபன்சாப் ஷாபூர் படிக்கும் கல்லூரியில் இந்து-இஸ்லாமிய மாணவர்களுக்கு இடையே சிறு மோதல் ஏற்பட்டது. அந்த சண்டையை ஷம்சீர் கான் பதான் போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த படங்களே தாக்குதல் நடத்தியவர்களின் இலக்கு. இதில் என் சகோதரன் சமீர் சுபன்சாப் ஷாபூர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று ஷாபூரின் சகோதரர் சாஹில் தி வயரிடம் தெரிவித்துள்ளார்.
“கடந்த சில மாதங்களாக, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் குறிவைத்து இந்துத்துவா அமைப்புகளின் வன்முறை கர்நாடகாவில் அதிகரித்து வருகின்றன” என்று தி வயர் கூறியுள்ளது.
Source : The Wire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்