Aran Sei

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

த்தியபிரதேச மாநிலம் இண்டோர் மாவட்டம் கெம்பல் பகுதியில், கிராமத்தை விட்டு வெளியேற மறுத்த இஸ்லாமிய குடும்பத்தினரை ஒரு கும்பல் தாக்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த கிராமத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்.

இந்தூர் மாவட்டம் கெம்பல் பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எட்டு பேரைக் கொண்ட ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் குடியேறியுள்ளனர். இரும்பு பட்டறை தொழில் செய்துவந்த அவர்கள் பேவ்டே கிராமத்தில் எல்லையில் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

மத கோஷங்கள் எழுப்பியதற்காக அந்த குடும்பத்தினரை சனிக்கிழமை (அக். 9) மாலை, இரும்பு கம்பிகளால் தாக்கிய 9 பேர் கொண்ட கும்பல், அவர்களை கிராமத்தை விட்டு வெளியேறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியது. இதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

அந்த குடும்பத்தைச் சேர்ந்த படுகாயமடைந்த உறுப்பினர் ஷாருக் லோஹர் (25) அளித்த புகாரின் பெயரில், இந்திய தண்டனைச் சட்டம் 323, 294, 506, 427, 147, 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என துணை ஆய்வாளர் விஷ்வஜித் தோமர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் சிங் என்பவர் அளித்த புகாரின் பெயரில், இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்மீது வன்முறையில் ஈடுபடுதல், கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323, 294, 506, 147, 148ன் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் ஒருவரையும் கைது செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டிய குடும்பத்தினர், தொடர்ந்து பல மாதங்களாக கிராமத்தை விட்டு வெளியேறும்படி அந்த கும்பலால் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

”இரண்டு மாதங்களுக்கு முன்பு, டிராக்டர் ட்ராலி தயாரித்து தருவதற்காக அந்த(இஸ்லாமிய)  குடும்பத்தைச் சேர்ந்த பரூக்கிடம் ரூ 75 ஆயிரம் கொடுத்திருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகியும் ட்ராலியை தயாரித்து தரவில்லை. இதனால், ட்ராலி கொடுக்க வேண்டும் அல்லது பணத்தை திரும்ப தர வேண்டும் கேட்க சென்ற இடத்தில் நடைபெற்ற வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது” என புகார் அளித்த விகாஸ் தெரிவித்துள்ளார்.

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

மேலும், ஆர்.எஸ்.எஸ் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சொல்லும் இஸ்லாமிய குடும்பத்தின் குற்றசாட்டை மறுத்துள்ளார்.

புகார் அளித்த விகாஸ் சிங்கிற்கு ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புள்ளது. அவர் சாகா பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாமிய குடும்பத்துடன் நெருங்கிய நட்பாக இருப்பதற்காக எனது தம்பிக்கும் விகாஸ் சிங்கிற்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர், காவல்துறை தலையிட்டு அந்த பிரச்னை தீர்க்கப்பட்டது” என அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் சுபாஷ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்