Aran Sei

டெல்லி கலவரத்திற்குபின் இடம்பெயரும் இஸ்லாமிய மக்கள் – வீடுகளை குறைந்த விலைக்கு விற்கும் அவலம் – லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் அறிக்கை

டந்த பிப்ரவரி 2020 டெல்லியில் நடந்த கலவரத்திற்கு பின் வடகிழக்கு டெல்லி பகுதியிலிருந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு புலம்பெயரத் தொடங்கி இருப்பதாக லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் (LAND CONFLICT WATCH) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு அடுத்து நடத்த மிகமோசமான கலவரம் கடந்த பிப்ரவரி 2020 டெல்லியில் நடந்த அன்று கலவரமாகும், இந்தக் கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 1000 மேற்பட்டோர் காயமுற்றனர் அதுமட்டுமல்லாது கலவரக்காரர்கள் தெரு எண்-13 பகுதியில் இருந்த மசூதியும், இஸ்லாமியர்களின் வீடுகளும் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டன.

டெல்லி கலவரத்தில் தாக்கபட்ட மசூதி – காவல்துறை விசாரணை அவசர கதியில் செய்யப்பட்டதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு

இந்நிலையில், தெரு எண்-13 சிவ நகர்- 6 பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் அச்சத்தின் காரணமாக இந்தப் பகுதியை விட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முஸ்தபாபாத் போன்ற பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் அமைப்பின் ஆய்வின் வழியாகத் தெரியவந்துள்ளது.

மேலும், இஸ்லாமியர் தங்கள் நிலத்தையும், வீடுகளையும் சந்தை மதிப்பைவிட 25% குறைவாக விற்பதாகவும், நிலத்தரகர்கள் இஸ்லாமியர்கள் நிலத்தை விற்பதை ஊக்குவிப்பதாகவும் ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

டெல்லி கலவரத்தில் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு – ஆவணங்களை காவல்துறை சரியாக பராமரிக்கவில்லை என நீதிமன்றம் குற்றச்சாட்டு

தெரு எண்-13 சிவ நகர்- 6 பகுதியில் விற்கப்படும் இஸ்லாமியர்களின் நிலங்களை பெரும்பாலும் இந்துக்களே வாங்கியுள்ளதாகவும், முன் இந்தப் பகுதியில் பன்முக தன்மையோடு பல சமுதாய மக்கள் வசித்ததாகவும், தற்போது ஒரு இன மக்கள் வாழும் பகுதியாக உருமாறியுள்ளதாகவும் கான்பிளிக்ட் வாட்ச் என்ற அமைப்பு கூறுகிறது.

பிப்ரவரி 2021, சரியாகக் கலவரம் நடந்து ஒருவருடம் கழித்து தெரு எண்-13 பகுதியில் 3 இஸ்லாமிய குடும்பங்களே வசித்து வருகிறார்கள். கலவரத்திற்கு முன் இந்தப் பகுதியில் 13 முதல் 15 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

மேலும், இஸ்லாமியர்கள் புலம்பெயர தொடங்கியபோது இந்தப் பகுதியில் இரும்பு கதவு ஒன்று எழுப்பட்டுள்ளதாகவும் கான்பிளிக்ட் வாட்ச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கடந்த 1992 மும்பை கலவரத்தின் போதும், 2002 குஜராத் கலவரத்தின் போதும் அச்சத்தின் காரணமாக இது போன்றே இஸ்லாமிய மக்கள் தங்கள் நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்