Aran Sei

தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் சென்ற இஸ்லாமிய சிறுவன் – தாக்கியவருக்கு ஜாமீன்

ண்ணீர் தாகம் எடுத்ததால் இந்து கோவிலுக்குள் சென்று நீர் அருந்திய இஸ்லாமிய சிறுவனைத் தாக்கிய நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் மாவட்டதின் தாசனா பகுதியில் உள்ள கோவிலில் தாகம் எடுத்ததால் தண்ணீர் அருந்த கோவிலுக்குள் சென்ற இஸ்லாமிய சிறுவனை ஷிரங்கி நந்தன் யாதவ் என்பவர் கொடூரமாக தாக்கினார் .

அதுமட்டுமல்லாது, அந்தச் சிறுவன், சிவ லிங்கத்தின் மீது சிறுநீர் கழிக்கமுயன்றார் அதனாலேயே தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சிறுநீர் கழிக்கும் காணொளி என்று கூறி 2018 ஆம் ஆண்டு ஆந்திராவில் சிறுவன் ஒருவன் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த காணொளியையும் போலியாக பரப்பியுள்ளனர்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு

இந்நிலையில், சிறுவனை கொடூரமாக தாக்கிய ஷிரங்கி நந்தன் யாதவ்விற்கு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியுள்ளது.

ஷிரங்கி நந்தன் யாதவ் , யதி நரசிங்க ஆனந்த் சரஸ்வதி என்ற சாமியாரின் பக்தர் அவர். அந்தச் சாமியார் இதற்கு முன்பு இஸ்லாமிய இளைஞரைத் தாக்கி அதைக் காணொளி எடுத்தும் வெளியிட்டிருந்தார்.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

இந்நிலையில் குற்றவாளி ஷிரங்கி நந்தன் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையமும் , மாநில குழந்தைகள் ஆணையமும் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷிரங்கி மீது ஜாமீன் பெறவியலாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்றமும் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SOURCE; THE WIRE

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்