Aran Sei

இந்துக்களை விட இஸ்லாமியர் மக்கள் தொகை பெருகும் என்பது உண்மையல்ல வெறும் பிரச்சாரம் – முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி

Credit : PTI

ருங்காலத்தில் இந்துக்களின் எண்ணிக்கையைவிட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது வெறும் பிரச்சாரம் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.

“மக்கள்தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவில் அரசியல்” என்ற புத்தகத்தின் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட குரேசி, “இந்தியாவில் இஸ்லாமியர்கள் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் பரப்பபடுகின்றன. அவை இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களிடையே விரோதத்தை வளர்க்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதால் தான் மக்கள் தொகை அதிகரிப்பதாக ஒரு கட்டுக்கதை சொல்லப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

“இஸ்லாமியர்கள் குறைந்த அளவில் தான் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். இஸ்லாமியர்களில் 45.3 விழுக்காடு இஸ்லாமியர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். அவர்களின் மொத்த குழந்தை பிறப்பு 2.61ஆக உள்ளது. ஆனால், இந்துக்கள் மிகவும் பின்தங்கியிருக்கவில்லை. அவர்களின் குடும்பக் கட்டுப்பாட்டு விழுக்காடு 54.5 விழுக்காடாகவும் குழந்தை பிறப்பு விகிதிம 2.13 விழுக்காடாகவும் உள்ளது.” என குரேஷி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிப்பால் மக்கள் தொகை சமநிலையை சீர்குலைக்கும் என்று ஒரு கட்டுக்கதையும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

1951ல் 9.8 விழுக்காடாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2011ல் 14.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 84.2 விழுக்காட்டிலிருந்து 79.8 விழுக்காடாக குறைந்துள்ளது. 60 ஆண்டுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 4.4 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களை விட இஸ்லாமியர்கள் விரைவாக குடும்ப கட்டுப்பாட்டைச் செய்து கொள்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு எண்ணிக்கையில் உள்ள இடைவெளி குறைந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

”அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இந்துக்களின் எண்ணிக்கையைவிட இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிட்ட சதி இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்துக்களின் எண்ணிக்கை விட இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று இஸ்லாமியர்களிடம் எந்த ஒரு அறிஞரும் அரசியல் தலைவரும் கேட்டுக் கொள்ளவில்லை” என குரேஷி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தினேஷ் சிங் மற்றும் பேராசிரியர் அஜய் குமாரின் கணித மாதிரிகளை மேற்கோள் காட்டிய குரேஷி இஸ்லாமியர்களால் இந்துக்களின் எண்ணிக்கையை ஒருபோதும் முந்த முடியாது எனத் கூறியுள்ளார்.

”1972 ஆண்டு செய்யப்பட்ட  அரசின் ஆய்வில் அனைத்து சமூகத்தினரிடமும் பல தார மணம் நடைமுறை உள்ளது என்று கண்டறியப்பட்டதை வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மக்கள் தொகையைப் பெருக்க பலதார முறையை கடைபிடிப்பபதாக கட்டுக்கதை பரப்பபடுகிறது. ஆனால் இஸ்லாமியர்களிடம் குறைந்த அளவில் தான் பல தார முறை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பலதார முறையை ஊக்குவிப்பதாக பொதுவான ஒரு கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் எதார்த்தம் அதுவல்ல. மேலும், இந்தியாவில் பாலின விகிதாரச்சத்தின் (1000 ஆண்களுக்கு 924 பெண்கள் மட்டுமே உள்ளனர்) அடிப்படையில் பார்த்த பலதார முறை சாத்தியமில்லை என குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகள் மீது வலதுசாரிகளின் வகுப்புவாத தாக்குதல் – தெருவோர வியாபாரிகள் சங்கம் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கவில்லை. குரானில் எந்த இடத்திலும் குடும்ப கட்டுப்பாடுற்கு தடை விதிக்கவில்லை. அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விளக்கங்கள் மட்டுமே உள்ளன என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் என்.என். வோஹ்ரா, முன்னாள் சுகாதார செயலாளர் கே. சுஜாதா ராவ், தி பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா ஆகியோர் புத்தக விவாதத்தில் பங்கேற்றனர்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்