Aran Sei

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு – ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், 2000 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கு முரணானது என்றும் அறிவிக்கக் கோரி பிரபல இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

அவர் தாக்கல் செய்த மனு தொடர்பான பிரமாண பத்திரத்தை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தொடர்பான ஆவணங்களை கூடுதல் தலைமை சட்ட ஆலோகர் ஆர். சங்கரநாராயணனுக்கு வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் சுஹ்ரித் பார்த்த சாரதிக்கு உத்தரவிட்டுள்ள தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ”இதன் மூலம் ஒன்றிய அரசு மூன்று வார காலங்களுக்குள் பதிலளிக்க முடியும் என்றும், மனுமீதான அடுத்த விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை மேற்கோள் காட்டி பதிவிட்ட கன்னட நடிகர் – உணர்வுகளை புண்படுத்தியதாக பிராமணர்கள் சங்கம் புகார்.

டி.எம். கிருஷ்ணா தனது பிரமாணப் பத்திரத்தில், ஒரு கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற முறையில், இந்த அரசியலமைப்பின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் தனியுரிமைக் கொள்கையை போற்றுவதாக கூறியுள்ளார்.

”என்னைப் பொருத்த வரை இசையைப் போலவே தனியுரிமையும் ஒரு அனுபவம். நான் தனியுரிமை பற்றி நினைக்கும்போது, என் வாழ்க்கை, நெருக்கம், அனுபவம், கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி, பயம் இல்லாமை மற்றும் உருவாக்கச் சுதந்திரம் பற்றி நினைக்கிறேன். சுதந்திரம், கண்ணியம் மற்றும் தேர்வு ஆகியவற்றை ஒரு கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு மனிதனாகவும் என்னுள் உள்ளார்ந்த அம்சங்களாக நான் நினைக்கிறேன்” எனக் தெரிவித்துள்ளார்.

‘தொழிலதிபர்களுக்கு கொள்ளையடிக்க உதவும் மோடியின் அரசு ஒரு கிழக்கிந்திய கம்பெனியை போன்றது’ – மகாராஷ்ட்ரா அமைச்சர் தோரத்

மேலும் 2017 ஆம் ஆண்டில் கே.எஸ். புட்டஸ்வாமி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டியுள்ள டி.எம். கிருஷ்ணா, “அந்தத் தீர்ப்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உத்திரவாதத்தின் அடிப்படையில், ஒரு கலைஞனின் தனியுரிமை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.

’ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறார்’, தனிமை என்பது அனைத்து தொடர்புகளிலிருந்தும் விலகிக் கொள்வது அல்ல, அதற்கான அர்த்தம் ஒரு கலைஞனுக்கும் அவனின் படைப்பாற்றல் ஆன்மாவிற்குமான உறவு என்பதாகும் என டி.எம். கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

‘2019-2020-ல் பெருநிறுவனங்களிடமிருந்து 217 கோடி நிதியுதவி பாஜக பெற்றது’ – தேர்தல் ஆணையம் தகவல்

நமது அரசியலமைப்பில் இருந்த கற்பனை சுதந்திரத்திற்கான அர்பணிப்பை இந்தத் தணிக்கைமுறை புண்படுத்திவிட்டதாக கூறிய கிருஷ்ணா, ”சுதந்திர பேச்சுமீதான உறவு, தனியுரிமை மீதான பாதிப்பு ஆகியவற்றின் மூலம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிகள், கலைஞர்களது உரிமையைப் புண்படுத்தியிருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடக சேவைகளைப் பயன்படுத்துபவர் என்ற முறையில் விதிகளின் இரண்டாம் பகுதி தனது உரிமைகளை மீறுவதாகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையில் மூன்றாம் பகுதி தனது உரிமைகளை மீறுவதாகவும் டி.எம்.கிருஷ்னா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்