Aran Sei

தமிழ்நாட்டில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை

மிழகத்தில்  கடந்த 2016 – 2020 ஆம்   ஆண்டுகளுக்கிடைப்பட்ட  காலகட்டத்தில்    கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சிறார்களின்  எண்ணிக்கை இருமடங்காக  உயர்ந்துள்ளது  என  தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை வழியாகத் தெரியவந்துள்ளது.

கடந்த  2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை நடந்த கொலைக் குற்றவழக்குகளில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாத நிலையிலும்,   கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சிறார்களின்  எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தேவாலயத்தை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த விஸ்வ இந்து பரிசத் – குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள பாதிரியார்

2016  ஆம் ஆண்டு  1,603 கொலைகள்  நடந்துள்ள நிலையில் அதில்   48 சிறார்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதேவேளையில்,  2020  ஆம் ஆண்டு  1,661 கொலைகள்  நடந்துள்ள நிலையில் அதில்   48 சிறார்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இதன் வழியாக,  2016  ஆம் ஆண்டு 3% ஆக இருந்த கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சிறார்களின்  எண்ணிக்கை,  2020  ஆம் ஆண்டு இருமடங்காக  6.3% ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

source: தி இந்து

மேலும்,  சென்னை, மதுரையின் ஊரகப் பகுதிகள் மற்றும் மாநகரப்பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம், தூத்துக்குடி  மாவட்டம் ஆகியப் பகுதிகளில் கணிசமான அளவில்  குற்றம்சாட்டப்பட்ட சிறார்களின்  எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

SOURCE: THE HINDU  

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்