Aran Sei

‘பிராமணர்களும் பனியாக்களும் என் பாக்கெட்டுகளில் உள்ளனர்’ – மத்திய பிரதேச பாஜக பொறுப்பாளர் கருத்து

பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனது பாக்கெட்டில் இருப்பதாக மத்திய பிரதேச பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

நேற்று(நவம்பர் 8), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள முரளிதர் ராவ், “என் இரு பாக்கெட்டுகளிலும் பிராமணர்களும், பனியாக்களும் இருக்கிறார்கள். பாஜகவில் பிராமண கட்சிக்காரர்கள் இருந்தபோது பிராமணர்களின் கட்சி என்று அழைக்கப்பட்டது. பனியா கட்சிக்காரர்கள் இருக்கும்போது பனியாக்கள் கட்சி என்று அழைக்கப்பட்டது. பாஜக அனைவருக்குமான கட்சி” என்று கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான இத்தாலி நிறுவனம் – ஆயுதம் வாங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பாஜக அரசு

சாதி அடிப்படையிலேயே வாக்குகளை பாஜக கோரி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கருத்திற்கு, தொடர்ச்சியான ட்வீட்களில் வழியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சப்கா சாத், சப்கா விகாஸ் என்று முழக்கமிடும் மத்திய பிரதேச பாஜக பொறுப்பாளர், தற்போது ஒரு பாக்கெட்டில் பிராமணர்கள், ஒரு பாக்கெட்டில் பனியா என்று சொல்கிறார்கள். அவர்களை உடமைகளை போல பாவிப்பது, அச்சமூகங்களை அவமதிக்கும் செயலாகும்” என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்: ‘கூட்டணி கட்சியான சிபிஎம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துங்கள் – முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

“பாஜகவைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றிய அச்சமூகங்களின் தலைவர்களுக்கு என்ன மரியாதை? பாஜக தலைவர்கள் அதிகார போதையிலும், ஆணவத்திலும் வளர்க்கப்பட்டுள்ளனர். பாஜக தனது அதிகாரப் பசிக்காக எங்கும் செல்லும்” என்று கமல்நாத் ராவ் தெரிவித்துள்ளார்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்