Aran Sei

முதியவர்களை சாலையில் தள்ளிய நகராட்சி ஊழியர்கள் – பணி நீக்கம் செய்தது நகராட்சி நிர்வாகம்

தரவற்ற முதியவர்களை, நெடுஞ்சாலையின் ஓரத்தில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகராட்சியின் ஊழியர்கள் தள்ளிய காணொளி காட்சி பதிவாகி இருப்பதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் காணொளியில், ஆதரவற்று இருந்த ஒரு ஆண் மற்றும் வயதான, பலவீனமான பெண்மணியை நெடுஞ்சாலையில் வீச முயன்றதை, இந்தூரின் புறநகர் பகுதியில் இருக்கும் ஷிப்புரா கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, முதியவர்களை நகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

வியாழன் (ஜனவரி 28) அன்று வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்த நிலையில், வெள்ளியன்று (ஜனவரி 29), முதியவர்களைச் சாலையில் விட முயற்சித்த இந்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தி ஹிந்து கூறியுள்ளது.

இந்தூர் நகராட்சி ஊழியர்களின் இந்தச் செயலை ஆளும் பாஜக அரசு விமர்சனம் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – கண்டனம் தெரிவித்த இந்திய அரசு

”வயதான முதியவர்களிடம், மனிதாபமற்ற முறையில் இந்தூர் நகராட்சி ஊழியர்கள் நடந்து கொண்ட சம்பவம்பற்றி இன்று, எனக்குத் தகவல் கிடைத்தது… நகராட்சி துறை ஆணையர் உட்பட இரண்டு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.முதியவர்களை முறையாகக் கவனித்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

”வயதானவர்கள்மீது மனிதாபமற்ற முறையில் நடந்து கொள்வதை எக்காரனம் கொண்டும் ஒரு போதும் ஏற்க முடியாது. ஒவ்வொரு முதியவருக்கும் அன்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். இதுவே நம் கலாச்சாரம் மற்றும் மனித ஆகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட மத்திய பிரதேச நகர நிர்வாகத்துறை அமைச்சர் பூபேந்திர சிங், இரண்டு ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளாரென தி ஹிந்து தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி – நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்ற கொலீஜியம்

இந்தூர் நகராட்சி ஊழியர்கள்மீதான குற்றச்சாட்டை மறுத்ததோடு, ஆதரவற்ற முதியவர்களை, அந்த ஊழியர்கள் இரவு விடுதிக்கு அழைத்துச் செல்லவே முயன்றதாக, இந்தூர் நகராட்சியின் துணை ஆணையர் அபய் ராஜங்காங்கர் தெரிவித்துள்ளாரென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தூய்மை என்ற பெயரில், இந்தூர் நகராட்சி ஊழியர்கள் முதியவர்களைக் குளிரில் தள்ளினர். அப்பாவி ஊழியர்கள் அவர்களால் என்ன செய்ய முடியும் … பாஜகவினர்  சித்தாந்தத்தின்படி, அவர்களின் மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, யஸ்வந்த் சின்ஹாவை விட்டுவிட்டு செயல்படுகிறார்கள்” எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறியதாக, தி ஹிந்து தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்