Aran Sei

அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்

ந்து மத கடவுள்களை அவமதித்தாகக் கைது செய்யப்பட்டு நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்ததாக, பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன், முனாவர் ஃபருக்கியின் மீது காவல்துறையில் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறை, முனாவர் ஃபாருக்கி உட்பட 4 நகைச்சுவை கலைஞர்களை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கைது செய்தது.

அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்

இதையடுத்து ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் முனாவர் ஃபாருக்கி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டதால், அவர் கடந்த ஒரு மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி முனாவர் ஃபாருக்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ரோஹிங்டன் நரிமன் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு ஜாமீன் மறுப்பு – இந்துக் கடவுள்களை அவமதித்த வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அப்போது, ஃபாருக்கி மீது சுமத்தப்பட்டுள்ள குற்ற ச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் அவரை சட்ட விதிமுறைகளின் படி கைது செய்யவில்லை எனவும் தெரிவித்துளள நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

ஃபாருக்கிக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யதுள்ள நீதிபதி, அவரை கைது செய்ய உத்தர பிரதேச அரசு பிறப்பித்துள் பிடிவாரண்டுக்கும் இடைக்கால தடை விதித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்