Aran Sei

கொரோனா நோயாளிகளின் நலனுக்காக இலவசமாக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர் – மனிதம் வாழட்டும்

காராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் நலனுக்காக ஆசிரியர் ஒருவர் இலவசமாக ஆட்டோ இயக்கி வருகிறார்.

தத்தாத்ரேய சாவந்த் என்ற அந்த ஆசிரியர் முறையான கொரோனா தடுப்பு உடைகளோடு கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ இயக்கி உதவி செய்து வருகிறார்.

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா நோயாளிகளுக்கு அரசின் உதவிகள் சில சமயங்களில் நேரத்துடனும் அல்லது நேரம்தவறியும் கிடைக்கின்றன. ஏழைகளால் தனியார் ஆம்புலன்சிற்கு பணம் கொடுக்க இயலாது. அதுமட்டுமல்லாது பொது வாகனங்களில் அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு இலவச சேவை வழங்கி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் இறக்கி விடுவதாகவும், குணமடைந்தவர்களை அவர்களது வீட்டில் கொண்டு சென்று விடுவதாகவும் தத்தாத்ரேய சாவந்த் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தப்பட்ட 40 பெண் கைதிகள்

தத்தாத்ரேய சாவந்த் மும்பை புறநகர் பகுதியில் உள்ள தன்யாசாகர் வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும், இதுவரை 26 கொரோனா நோயாளிகளுக்கு தத்தாத்ரேய சாவந்த் இலவச சேவை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source: ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்