Aran Sei

‘அனைவரும் இரண்டு மாஸ்க் அணியுங்கள்’ – கைக்கூப்பி கேட்டுக்கொண்ட மும்பை மேயர்

தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற பிறகே, தடுப்பூசி முகாம்கள் தடையின்றி செயல்பட முடியும் என்றும் அனைவரும் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கைக்கூப்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (மே 1), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள கிஷோரி பெட்னேகர், “தடுப்பூசி பெற்றுக்கொள்ள கோவின் செயலியில் பதிவுசெய்தவர்கள், அலைபேசிக்கு மெஸேஜ் வந்த பின்தான் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்ல வேண்டும். உங்களுக்கு மெஸேஜ் வரும் வரை முகாம்களுக்குச் செல்ல வேண்டாம்.  தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற பிறகே, தடுப்பூசி முகாம்கள் தடையின்றி செயல்பட முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைக்கவில்லை; தடுப்பூசி முகாம்களை மூடுகிறோம்’ – காஷ்மீர், மகாராஷ்டா அரசுகள் அறிவிப்பு

மேலும், அனைவரும் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கைக்கூப்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, இன்று (மே 1) செய்தியாளர்களை சந்தித்து பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்,  “நாங்கள் இன்று கொரோனா தடுப்பூசி முகாமை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இன்று 3 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுள்ளோம். அதிலும், 20,000 தடுப்பூசிகளை புனே மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று, 45 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசி கையிருப்பு எங்களிடம் இல்லை. அதனால், புனே மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

Source : Live Mint

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்