Aran Sei

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பியில் (தொலைக்காட்சி மதிப்பீடுகள் புள்ளி) முறைக்கேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய  ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஏஆர்ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது, மும்பை காவல்துறை தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (ஜனவரி 15), இந்த வழக்கில் நடந்து வரும் விசாரணை குறித்த நிலை அறிக்கையை, மும்பை உயர் நீதிமன்ற  நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷா பிட்டலெ அடங்கிய அமர்வு முன் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

அப்போது, ஏஆர்ஜி அவுட்லியர் மீடியா சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “டி.ஆர்.பி எண்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக மும்பை காவல்துறையினர் கோஸ்வாமியின் மீது சுமத்திய  குற்றச்சாட்டுகள் அனைத்தும் முட்டாள்தனமானவை.” என்று வாதிட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், “இவர் மீது அமலாக்கதுறை, பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில் நடந்துகொண்டிருக்கும் விசாரணை குறித்து நிலை அறிக்கையை நீதிமன்றம் அமலாக்கதுறையிடம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்வதால், மும்பை காவல்துறையினரால் ஏஆர்ஜிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கானது எவ்வளவு போலியானது என்பது நீதிமன்றத்திற்கு தெரியவரும்.” என்று அவர் கூறியுள்ளார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

இது குறித்துப் பதிலளித்த அமலாக்கதுறையின் ஆலோசகரான அனில் சிங், நிலை அறிக்கை தயாராக உள்ளது என்றும் நீதிமன்றம் இதை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து பேசிய, மகாராஷ்டிரா அரசின் சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அனில் சிங்கின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “இந்த விஷயத்தில் அமலாக்கதுறை தலையிடுவதில்  எனக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

அதனை தொடர்ந்து பேசிய ஏஆர்ஜி அவுட்லியர் மீடியா சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அமைப்பு, ஒரு அறிக்கை தாக்கல் செய்வதை, ஒரு மாநில அரசு எவ்வாறு தடுக்க முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு புரியவில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஹரிஷ் சால்வேயின் கேள்விக்குப் பதில் மனு தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் உத்தரவிட்டதுடன், மறுவிசாரனையை வரும் ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

மேலும், கபில் சிபல் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து, ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஏஆர்ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது, மும்பை காவல்துறை தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்