Aran Sei

தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கை மனவேதனையைத் தருகிறது – மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

credits : national herald

மக்களுக்கு தடுப்பூசியைச் கொண்டுச் சேர்ப்பதில், ஒன்றிய அரசு நடந்து கொள்ளும் விதம் கடும் ”மனவேதனையையும், ஏமாற்றத்தையும்” அளிப்பதாக மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கும் (75 வயதுக்கு அதிகமானோர்), தடுப்பூசி மையங்களுக்கு செல்ல இயலாதவர்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரி, வழக்கறிஞர்கள் துருதி கபாடியா மற்றும் குனால் திவாரி, மும்பை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மத்திய அரசின் நடவடிக்கை கடும் மனவேதனையை அளிக்கிறது. மத்திய அரசு அதிகாரிகளின், நடவடிக்கைகள் கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது. உங்கள் அதிகாரிகள் முற்றிலும் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் (அரசு) தான் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். அதை விடுத்து, வயது முதிர்ந்தவர்களை நீங்கள் தடுப்பூசி மையங்கள் நோக்கி ஒட வைக்கின்றீர்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி கொள்கை குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – வலியுறுத்தும் காங்கிரஸ்

மேலும், ”தடுப்பூசிகளை வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் செலுத்தினால், சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட கூடும், என்ற மத்திய அரசின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ”தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனும் அறிவியல்பூர்வமான தரவுகள் உங்களிடம் உள்ளதா? தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஒருவர் மரணமடைந்து விட்டார் எனும் ஒற்றை ஆதாரத்தையாவது காட்டுங்கள்? நிபுணர்கள் குழு ஏதேனும் ஒன்றை (தடுப்பூசி எடுத்து கொள்வது நல்லது அல்ல கெட்டது) பேச வேண்டும். ஆமாம், இல்லை என்று உடைத்து பேச வேண்டும். தேவையில்லாமல் குழப்பிக் கொண்டிருக்க கூடாது” என்று கூறியுள்ளதாகவும் என்டிடிவியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் – ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

இங்கிலாந்தில் கோவிஷீல்டு தடுப்பூசி தான் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அங்கு வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு உருவாக்கியுள்ள, தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான நிபுணர் குழுவின் தலைவர், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்