Aran Sei

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவுக்கு ஆறு மாதம் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் எழுத்தாளர் வரவர ராவ்வுக்கு, ஆறு மாதம் பிணை வழங்கி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தெலங்கானாவைச் சேர்ந்த  வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது. அப்போதே அவருக்கு வயது மூப்பு காரணமாக, சில உடல் உபாதைகள் இருந்துள்ளன. பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களுள், வரவர ராவும் ஒருவர்.

வரவர ராவின் உடல்நிலை குறித்து முரணான அறிக்கை – புதிய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

 

கடந்த மே மாதம், அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள மும்பை டலோஜா மத்திய சிறையில், வரவர ராவ் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக ஜேஜே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வரவர ராவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்

அதன் பிறகு அவருடைய உடல் நலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என, வரவர ராவ் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 22), வரவர ராவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளுடன் கூடிய ஆறு மாதத்திற்கான பிணையை வழங்கி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

வரவர ராவ் மும்பையிலேயே இருக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ஆஜராக வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்