உறவினரான சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையும் நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் தனது உத்தரவில், “சிறார்களுக்கு இடையிலான ஒருமித்த உடலுறவு சம்பவங்கள், சட்டத்தின் கீழ் ஒரு சாம்பல் நிறப்பகுதியாகும், ஏனெனில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் சிறார்களின் ஒப்புதல் என்பது சட்டத்தின் பார்வையில் செல்லுபடியாகாது” எனக் நீதிபதி கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது தந்தை வழி மாமா விட்டில் வசித்த அந்த மைனர் சிறுமி, அவரது உறவினர் தகாத இடத்தில் தொட்டதாகவும், வயிறு வலிக்கிறது என்று தனது நண்பரிடன் தெரிவித்தாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சக்கா ஜாம்’ தேசிய நலனில் விவசாயிகளின் அமைதி சத்தியாக்கிரகம் – ராகுல் காந்தி
சிறுமி கூறியதை அந்த நண்பர் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசிரியர் விசாரித்தபோது, தனது உறவினர் ஒருவரால் எங்கு, எப்போது, எப்படி எல்லாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன், எனச் சிறுமி கூறியதாக அதில் தெரிவித்துள்ளது.
சிறுமிக்கு நிகழ்ந்ததை அந்த ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் எடுத்துச் சென்றதை அடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354, பிரிவு 376 (2) (n), போக்சோ சட்டத்தின் 3,4,5,6 பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டு, விசாரணையின் முடிவாகக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டதாக தி ஹிந்து கூறியுள்ளது.
நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே”இந்த வழக்கின் உண்மைகள் விசித்திரமானவை” என்றும், ”பாதிக்கப்பட்டவரும், குற்றவாளியும் நெருங்கிய உறவினர்கள், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் சிறுமிக்கு வயது 15 மற்றும் குற்றவாளிக்கும் வயது 17, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்” என நீதிபதி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164ன் கீழ் கொடுக்கப்பட்ட தனது அறிக்கையிலிருந்து சிறுமி சற்று மாறியிருக்கிறார், சிறுமியின் தாயாரும் குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவதை விரும்பவில்லை, மேலும் சிறுமி பாலியல் தாக்குதலுக்குள்ளானாரெனக் கூறும் மருத்துவர்களின் கருத்தை நிருபிக்கும், தடவியல் சான்றிதழையும், வழக்கின் விசாரணை நடைபெறும் வரை பெறவில்லை” என நீதிபதி தெரிவித்துள்ளதாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிக்குத் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ”பாதிக்கப்பட்டவர், காவல்துறைக்கு கொடுத்த அறிக்கை மற்றும் 164வது பிரிவின் கீழ் பதியப்பட்ட அறிக்கை இரண்டும், வகுப்பு ஆசிரியரின் உதாரணத்தின் மூலம் கொடுக்கப்பட்டது, எனவே தண்டனையை நிறுத்திவைக்கும் முடிவுக்கு வந்ததாகவும், சிறுமி மற்றும் அவரது தாயாரின் வாக்குமூலங்களை மறுதலிக்க முடியாது எனக் கூறும் நீதிமன்றம், இந்த விசயத்தில் இருவரின் வயதையும் கருத்தில் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், “குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்தும் குழந்தைகளைப் பாதிகாப்பதிலும் ஒரு முன்னேறிய, குறிப்படத் தகுந்த வளர்ச்சியாகப் போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தியது இருக்கிறது என்றும், 18 வயதுக்குட்பட்ட எந்த ஒரு குழந்தையும் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகாமல் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்ததாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ சிறார்களுக்கு இடையிலான ஒருமித்த உடலுறவு சம்பவங்கள், சட்டத்தின் கீழ் ஒரு சாம்பல் நிறப்பகுதியாகும், ஏனெனில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் சிறார்களின் ஒப்புதல் சட்டத்தின் பார்வையில் செல்லுபடியாகாது” என்பதையும் நான் அறிவேன், என நீதிமன்றம் கூறியுள்ளதாக தி ஹிந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.