Aran Sei

போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வழக்கில் பாஜகவினரை விடுவித்தது ஏன்? – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) கைது செய்யப்பட்டவர்களில் மும்பை பாஜக இளைஞரணித் தலைவர் மோகித் கும்போஜ் என்கிற பாரதியாவின் உறவினர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்ததும் விடுவித்தது ஏன்? என தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அரசின் அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மூன்று பேரும் ஏன் கைது செய்யப்பட்டார்கள், விடுதலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து மும்பை காவல்துறையின் உயர்மட்ட விசாரணைக் கோரி மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் புகாரில் கைதான ஆர்யன் கான் – பாஜக சூழ்ச்சி குறித்து காணொளி வெளியிட்ட மகாராஷ்டிரா அமைச்சர்

”அக்டோபர் 3 ஆம் தேதி தேசிய போதைப் பொருள் தடுப்பு (என்சிபி)  பிரிவின் இயக்குநர் சமீர் வான்க்டே வெளியிட்ட ஊடக அறிக்கையில், 8 முதல் 10 பேர் காவலில் உள்ளனர். ஆனால் எட்டு பேரை மட்டுமே அவர் கைது செய்தார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, 11 காவலில் இருந்தனர். அதில், ரிஷப் சச்தேவா, பிரதிக் கன்பனா, அமீர் பர்னீச்சர்வாலா ஆகிய மூன்று பேர் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபிறகு, விடுவிக்கப்பட்டனர். இந்த மூன்று பேரை விடுவிக்கக் கோரி சமீர் வான்க்டேவிடம் போனில் பேசியது யார் என்பது தெரிய வேண்டும். அவர்களில் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்” என நவாப் கோரிக்கை வைத்துள்ளார்.

”கப்பல் மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து பகுதிகளின் சிசிடிவி காட்சிகள் மற்றும் சமீர் வான்க்டே, அவரால் விடுவிக்கப்பட்ட மூன்று பேரின் செல்போன்கள் மும்பை காவல்துறையினரால் சோதனை செய்யப்பட வேண்டும்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

”ரிஷப் சச்தேவாவின் குடும்பத்தினர் என்சிபி அலுவலத்திற்குள் இருந்தனர். அவர்கள் எவ்வாறு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் இது ஷாருக் கானை குறிவைக்க அவரது மகன் ஆர்யன் கான் மீதுப் புனையப்பட்ட வழக்கு என்பது தெளிவாகிறது” என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

”வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிரா  மாநிலத்தின் நான்கு காவல் நிலையங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கேஎஸ் கோஸ்வாமி, ஆர்யன் மற்றும் அர்பாஸ் மெர்சண்டிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். ஒரு மோசடிப் பேர்வழியின் சாட்சியைத்தை எவ்வாறு என்சிபி ஏற்கிறது” என நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : The New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்