Aran Sei

புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. .

ஒன்றிய அரசின் கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்காத பட்சத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த 15 நாட்கள் கழித்தும் ஒன்றிய அரசு புதிய விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளீஷர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்